நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ், 6 பேருந்துகளை வழங்கிய இந்தியா

Report

நேபாளத்துக்கு 30 ஆம்புலன்ஸ்கள், 6 பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. காத்மாண்டிலுள்ள நேபாளத்துக்கான இந்திய தூதரகத்தில் இந்திய குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், நேபாளத்தை சேர்ந்த பல்வேறு மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்கு 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 6 பேருந்துகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தை சேர்ந்த பல்வேறு மருத்துவமனைகள், தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்கு இந்தியா இதுவரை 782 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 154 பேருந்துகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1214 total views