சீனாவில் அதி தீவிரமாகும் கொரோனா வைரஸ்! பலியின் எண்ணிக்கை குறித்து தீயாய் பரவும் அதிர்ச்சி தகவல்

Report

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர்.

பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கு பரவியது. இதனிடையே, சீனாவில் நேற்று காலை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.

இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 41 ஆக உயர்ந்தது. பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

அவர்களில் 11 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள். சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 1,300 பேர் பாதிப்படைந்து உள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 13 பேர் பலியான நிலையில், பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது.

3784 total views