சீனாவில் கொரோனா! நைஜீரியாவில் லசா!

Report

கரோனா வைரஸ் ஆசிய நாடுகளில் பரவலான பாதிப்பு ஏற்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் நைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நைஜீரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில்,

நைஜீரியாவில் லசா காய்ச்சலின் தீவிரம்அதிகமாகி உள்ளது. லசா காய்ச்சலுக்கு இதுவரை29 பேர் பலியாகி உள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 11 மாகாணங்கள் இக்காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில் , தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் கூறியுள்ளனர்.

லசாகாய்சல் என்றால் என்ன?

லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. எனினும் இவ்வைரஸ்கள் அளவுக்கு லசா ஆபத்தானது அல்ல என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை லசா காய்சல் காரணமாக கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்காய்ச்சல் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டதுடன், இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்களின் தொற்றாலும் பரவ அதிக வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

3178 total views