அமெரிக்க இராணுவ விமானம் ஒன்றிற்கு நேர்ந்த கதி.!

Report

அமெரிக்க இராணுவ விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தலிபான் தகவல் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிழக்கு பகுதியில் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள தலிபான் முக்கிய சிஐஏ அதிகாரிகள் உட்பட விமானத்திலிருந்த அனைவரும் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபானின் கட்டுப்பாட்டுப்பகுதியில் விழுந்து நொருங்கிய விமானம் குறித்து மர்மம் நிலவுகின்றது.

அமெரிக்க விமானப்படையில் இலச்சினை பொறிக்கப்பட் விமானத்தின் சிதைவுகளை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில வெளியாகியுள்ளன.


தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள டிஹ் யாக் பகுதியிலேயே விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.

முதலில் விழுந்து நொருங்கியது பயணிகள் விமானம் என தகவல்கள் வெளியான போதிலும் அதிகாரிகள் பின்;னர் அதனை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க விமானப்படையின் இலச்சினையுடன் கூடிய விமானத்தின் சிதைவுகளை காண்பிக்கும் படங்கள் டுவிட்டரில் வெளியாக தொடங்கியுள்ளன.

ஆப்கான் பத்திரிகையாளர் ஒருவர் இதனை வெளியிட்டுள்ளார்.

விமானம் தீப்பிடித்து எரிவதையும் அதனை சுற்றி பலர் காணப்படுவதையும் வீடியோவில் காணப்படுகின்றது

9150 total views