தீயில் கருகிய 15 குழந்தைகள்!

Report

மேற்கிந்திய தீவுகளுக்கு சொந்தமான ஹெய்ட்டியில் குழந்தைகள் காப்பகம் ஒன்று தீ பிடித்து எரிந்ததில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க கிறிஸ்தவ குழு ஒன்றினால் நடாத்தி வந்த குழந்தைகள் இல்லத்திலேயே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , பல்வேறு தரப்பினர் சம்பவம் தொடர்பில் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கண்டறிய பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றதுடன் எரியும் மெழுகு வர்த்தியினால் தீப்பிடித்ததா என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் இடம்பெற்றபோது அங்கிருந்த 60 குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த காப்பக்கத்தில் சுமார் 150 குழந்தைகளுக்கு மேல் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2048 total views