சீன நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ள அரசாங்கத்தின் அறிவிப்பு

Report

சீன நிறுவனங்கள் கூடிய விரைவில் உற்பத்தியை தொடங்க அவைகளுக்கு தேவையான ஆதரவு அளிக்கப்படும் என சீன அரசாங்கம் கூறியுள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா, கொரானா காரணமாக , தொழில், உற்பத்தி, வர்த்தகம் முடங்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்குள்ள சிறு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முக்கிய முதலீட்டு திட்டங்களுக்கு நிதியுதவி, கடனுதவி வழங்குவது விரைவுபடுத்தப்படும் என்று சீன வங்கிகள் மற்றும் காப்பீட்டு துறை ஒழுங்குமுறை ஆணைய துணைத் தலைவர் லியாங் தாவோ தெரிவித்துள்ளார்.

இதேபோல சிறு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் உரிய ஆதரவு அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் , சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு சிக்கல் நேராத வகையில், அன்னிய செலாவணி கையிருப்பு பராமரிக்கப்படும் என அதற்கான சீன ஒழுங்குமுறை ஆணையமும் தெரிவித்துள்ளமையானது பாதிக்கபட்ட சீன நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6076 total views