கொரோனாவால் சீனாவுக்கு நேர்ந்ததை வெளிக்கொணர்ந்த இருவர் மாயம்..!

Report

சீனாவின் வுகான் நகரில் 'கொரோனா' பாதிப்புகளை ஆவணப்படுத்திய இருவர் மாயமாகியுள்ளனர்.

வுகான் நகரைச் சேர்ந்த ஃபாண்ட் பின் (Fand Bin) என்பவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றின் ஆம்புலன்சில் இருந்த உடல்களை எண்ணிவிட்டு இத்தனை உடல்களா என தேம்புவது போன்ற காணொளி சமூகவலைதளங்களில் பரவியது.

இதுபோன்ற பல்வேறு காணொளிகளை வெளியிட்ட ஃபாண்ட் பின் பின்னர் மாயமானார்.அதேபோன்று வுகான் நகரில் நெஞ்சை உருக்கும் காணொளிகளை வெளியிட்ட இளம் வழக்கறிஞரான சென் க்யூஷி (Chen Qiushi) என்பவரும் மாயமாகியுள்ளார்.

அவர்கள் அரசால் வலுக்கட்டாயமாக தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருக்கக்கூடும் என அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.சீன அரசு கொரானா பாதிப்பின் தீவிரத்தை குறைத்துக் காட்டுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் பாதிப்புகளை அம்பலப்படுத்திய இருவர் மாயமான விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

8738 total views