உலகை உலுக்கும் கொரோனா.!1981-ல் கணிக்கப்பட்ட நாவலின் அதிர்ச்சியூட்டும் பக்கங்கள்

Report

தற்பொழுது உலகையே அச்சத்திற்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் குறித்து, 1981-ல் வெளியிடப்பட்ட "The Eyes of Darkness" என்ற திகில் நாவலில் கூறப்பட்டுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹானில் துவங்கி 27-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா உலக மக்களுக்கு மரண பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் சீனவில் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருவது சமீப நாட்களாக அன்றாட நிகழ்வாகிவிட்டது.

இந்நிலையில் எப்படியாவது கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சீனா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன.

இவ்வாறான நிலையில் உலக நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வரும் கொரோனா வைரஸை போலவே, ஒரு உயிர்கொல்லி வைரஸ் குறித்து The Eyes of Darkness என்ற கற்பனை கலந்த த்ரில்லர் நாவலில் சுமார் 39 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டிருக்கிறது.

அந்த நாவலில் கூறப்பட்டதை போலவே தான் தற்போது நிஜத்தில் நிகழ்ந்து வருவதாக சமூக வலைத்தளவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த நாவலை எழுதியவர் டீன் கூன்ட்ஸ் (Dean Koontz) என்ற அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் ஆவார். Eyes of Darkness நாவலில், சீன ராணுவ ஆய்வகத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. வுஹானில் அமைக்கப்பட்டுள்ள அந்த ராணுவ ஆய்வகம், போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த புதிய வைரஸ் தயாரிப்பு ஒன்றில் ஈடுபடுவதாகவும், இறுதியாக கொடூர வைரஸ் ஒன்று உருவாக்கப்படுகிறதாகவும் அந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளது.

அந்த உயிர்கொல்லி வைரசுக்கு wuhan 400 என நாவலில் பெயரிடப்பட்டு கதை தொடர்கிறது. தற்போது உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா, வுஹான் வைராலஜி ஆய்வகத்தில் மனிதர்களால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதனை bio weapon ஆக சீனா பயன்படுத்த நினைத்து உருவாக்கியதாகவும், ஆனால் அந்நாடே எதிர்பார்க்காத வகையில் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவி அந்நாட்டு மக்களையே அழித்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத பல புகார்கள் சீனா மீது சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் Eyes of Darkness நாவலை எழுதிய Dean Koontz தற்போது தீர்க்கதரிசியாக பார்க்கப்படுகிறார். ஏனென்றால் கற்பனை நாவலில் வருவதை போலவே, வுஹான் நகரில் தான் தற்போது கொரோனா வைரஸ் உருவானது.

அதே போல அந்த நாவலில் வைரஸ் ஒரு சரியான ஆயுதம். ஏனெனில் இது மனிதர்களை மட்டுமே பாதிக்கிறது, மேலும் இது மனித உடலுக்கு வெளியே ஒரு நிமிடம் கூட உயிர்வாழ முடியாது. பெரும்பாலான மக்களை கொன்று மறைமுக போர் தொடுத்தவர்களை வெற்றி கொள்ள வைக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நாவலில் கற்பனையாக கூறப்பட்ட பல தகவல்கள், நிஜத்துடன் ஒத்துப்போவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைப் பற்றிய புத்தகங்களில் நிபுணத்துவம் பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளரான Paul French, சீனாவில் வைரஸ்களைச் சுற்றியுள்ள பல தகவல்கள் இரண்டாம் உலகப் போருடன் தொடர்புடையவை. எனவே ஆசிரியர் கூன்ட்ஸ் Eyes of Darkness-ல் வைரஸ் பற்றி எழுதியுள்ள பகுதிக்கு, இது தொடர்பான சிந்தனையும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

9886 total views