வுஹானில் சுற்றிவளைக்கப்படும் மக்கள்!

Report

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ள சீனாவின் வுகான் நகரின் வீடுகளை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

கொரோனா தக்கத்திற்குள்ளான நபர்களை சுற்றிவளைத்து பிடிப்பதற்காவே அவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சீனாவின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் எவரும் கட்டாய மருத்துவபரிசோதனைகளிற்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ள சீன அரச ஊடகம் பாதிக்கப்பட் நபருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார் என கருதப்படுபவரும் தனிமைப்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்காக நகரின் எட்டு பிரதேசங்களில் 10 தற்காலிக தடுப்பு நிலையங்களை அதிகாரிகள் உருவாக்கவுள்ளதாக வுகானின் சுட்டியான் நாளேடு தெரிவித்துள்ளது.

இதற்காக தொழிற்சாலைகளில் உள்ள கட்டிடங்கள், கைத்தொழில்பேட்டைகள்,போக்குவரத்து நிலையங்கள் போன்றவை தற்காலிக தடுப்பு நிலையங்களாக மாற்றப்படுகின்றன.

சிறிதளவு அறிகுறிஉள்ளவர்கள் கூட இந்த தடுப்பு நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவார்கள் எனவும் அந்த நாளேடு கூறியுள்ளது.

அத்துடன் வுகனானின் அனைத்து சமூகங்களும் கிராமங்களும் அதிகாரிகளின் 24 மணி நேர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு ,அந்த சமூகங்கள் கிராமங்களின் வெளி உலக தொடர்பு முற்றாக துண்டிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

இன்று முதல் இருமல் மருந்தினை கொள்வளவு செய்பவர்கள் அல்லது மருத்துவகிசிச்சை பெறுபவர்கள் தங்கள் அடையாள அட்டையினை பெறவேண்டும் என்ற அறிவிப்பும் அங்கு வெளியாகியுள்ளது.

மேலும் காய்ச்சல் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து உள்ளுர் குழுக்களிற்கு அறிவிக்கவேண்டும் என்றும் அல்லது நோய்வாய்ப்பட்டால் தனிமைப்படுத்தலிற்கு தங்களை உட்படுத்தவேண்டும் என்ற கட்டாய நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் கட்டாய நடவடிக்கைகளிற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் வுகான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாதிப்பு குறித்து தெரிவிப்பதை தாமதிப்பவர்கள்,அல்லது வதந்திகளை பரப்புபவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் வுகான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் வுகான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்தவாறு வீடுகளை கதவுகளை தட்டி மருத்துவபரிசோதனைகளை மேற்கொள்வதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை வைரசினால் பாதிக்கப்பட்ட வுகானின் பிரபல மருத்துவரான லியு ஜிம்மிங் கொரோனா பாதிப்பால இன்று உயிரிழந்துள்ளார்.

3613 total views