சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக போதை சிகரெட் விற்ற நபர்கள் கைது..!

Report

ஸ்பெயினில் மாட்டுத் தொழுவத்திற்கு கீழே 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக செயல்பட்ட போதை சிகரெட் தயாரிக்கும்தொழிற்சாலையில் அதிரடியாக சோதனையிட்ட போலீசார் 20 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சகம், அண்டலுசியன்(Andalusian)நகரில் உள்ள தொழுவம் ஒன்றில்சுரங்கம் அமைத்து தடை செய்யப்பட்ட தொழிற்சாலைசெயல்பட்டு வந்ததாகவும்.

அது ஒரு மணிநேரத்தில் 3500 சிகரெட்டுகளை தயாரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளது. அங்கிருந்து ஒரு லட்சத்து 53 ஆயிரம்சிகரெட் பாக்கெட்டுகள், 17,600 கிலோ புகையிலை தூள்மற்றும் 144 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

1017 total views