கொரோனா பாதிப்பால் உயிரிழந்த கணவர்... வாகனத்தின் பின் கதறியபடி ஓடிய மனைவி!

Report

வுகான் மருத்துவமனை இயக்குநர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தின் பின்னால் அவரது மனைவி கதறி அழுதபடி ஓடிய நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனாவின் மையமாக கருதப்படும் வுகான் நகரிலுள்ள வூச்சங் மருத்துவமனையின் இயக்குநர், லியூ ஷிமிங்கும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.

அப்போது கணவரின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல், அவரது மனைவி கதறி அழுதபடி வாகனத்தின் பின்னாலேயே ஓடினார்.

செவிலியரான அவரும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவப் பணியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2187 total views