சண்டையிடுவது போல் குஞ்சுகளுக்கு பாலூட்டும் பிளமிங்கோ பறவைகள்...!

Report

இரண்டு பிளமிங்கோ பறவைகள் சண்டையிடுவது போன்ற காணொளியை பகிர்ந்துள்ள இந்திய வனப்பணி அதிகாரி அவை, தங்கள் குஞ்சுப் பறவைக்கு கிராப் பாலூட்டுவதாக தெரிவித்துள்ளார்.

ஐஎப்எஸ் அதிகாரியான பர்வீன் கஸ்வான் அவ்வப்போது வனவிலங்குகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுடன், அவை குறித்த அரிய தகவல்களையும் பதிவிடுவதை வாடிக்கையான கொண்டுள்ளார்.

இந்நிலையில்பிளமிங்கோ பறவைகளின் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள அவர், அவை சண்டையிடவில்லை என்றும்,தங்கள் குஞ்சுப்பறவைக்கு பாலூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

திடஉணவுகளை உண்ணத்துவங்கும் முன், செரிமானப்பாதையில் இருக்கும் உணவு சேகரிப்பு அமைப்பானகிராப்பில்((crop)) இருந்து சுரக்கும் புரதமும் கொழுப்பும் நிறைந்த பாலையே பிளமிங்கோ பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு ஊட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1749 total views