டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா தொற்றுக்கு ஆளான 2 நபர்களுக்கு நேர்ந்த சோகம்.!

Report

கொரோனா தொற்றை அடுத்து ஜப்பானின் யோகஹோமா துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் (Diamond Princess)சொகுசு கப்பலில் பயணித்த 2 பேர் உயிரிழந்து விட்டதாக, அதன் கேப்டன் ஸ்டீஃபனோ ரவேரா(Stefano Ravera) தெரிவித்துள்ளார்.

80 வயதுக்குமேற்பட்ட இந்த 2 பேரும் நோய் தொற்றை தொடர்ந்து மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர் என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணித்த இந்த கப்பலில் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 நாள் நோய் தடுப்புக் காவலுக்குப் பிறகு,தொற்று ஏற்படவில்லை என்று உறுதியான சுமார் 500 பேர், கப்பலில் இருந்து படிப்படியாக வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

1240 total views