வெளிநாட்டினர் உள்பட ஜேர்மனியில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களை கொல்ல துடிக்கும் கொலையாளியின் அதிர்ச்சி பதிவு!

Report

ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு ஒன்பது பேரை கொலை செய்த நபர் தனது தனிப்பட்ட இணையத்தளத்தில் ஜேர்மனியில் உள்ள இந்தியா பாக்கிஸ்தான் பிரஜைகள் உட்பட பல ஆசிய ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த பதிவில்,

ஜேர்மனியில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரொபியாஸ் ரத்ஜென் எனும் அந்த நபர் தனது இணையத்தளத்தில் எங்கள் மத்தியில் அழிவை ஏற்படுத்தக்கூடிய இனக்குழுக்களும், இனங்களும் கலாச்சாரங்களும் உள்ளன என தெரிவித்துள்ளார்.

இவர்களை சுத்தம் செய்யவேண்டும் ,இது உலக மக்கள் தொகையை பாதியாக குறைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்வரும் இனத்தவர்கள் நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என அவர் குறித்த நாடுகளின் பட்டியலை தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

மொராக்கோ அல்ஜீரியா லிபியா துனிசியா எகிப்து இஸ்ரேல் சிரியா ஜோர்தான் லெபனான்,துருக்கி ஈரான்ஈராக்; இந்தியாபாக்கிஸ்தான் பங்களாதேஸ் வியட்நாம் கம்போடியா பிலிப்பைன்ஸ்.

இவர்களை முற்றாக அழிப்பதை சாத்தியமாக்கும் பட்டன் ஒன்று இருந்தால் நான் ஒரு நொடியில் அதனை அழுத்துவேன் என ரத்ஜென் தெரிவித்துள்ளார்.

பாடசாலையிலும்அலுவலகத்திலும் கிடைத்த அனுபவங்கள் மூலமாகவும் ஜேர்மனிய பிரஜைகளிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் இடையிலான மோதல்கள் குறித்த பத்திரிகை செய்திகளை படித்த பின்னரும் இந்த முடிவிற்கு வந்ததாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணையத் தளத்தினை அதிகாரிகள் தற்போது அகற்றியுள்ளனர்

இதேவேளை இவர் இன்று மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரத்ஜென் அவரது வீட்டில் தாயாருடன் இறந்து கிடக்க காணப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1335 total views