ஸ்விட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கிய பெண்!

Report

ஸ்விஸ் பனிச்சரிவில் சிக்கிய பெண் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட காணொளி வெளியாகி உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த விக்டர் லெய்பெங்குத் என்பவர் கடந்த ஜனவரியில் ஸ்விட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

ஆல்ப்ஸ் மலைச்சரிவில் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் விக்டர் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் முழுமையாக புதைந்துபோயினர்.

இந்தவிபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில்பனிக்குள் புதைந்த விக்டர் மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க தன்னைச் சுற்றியிருந்த பனியை விலக்கியுள்ளார். மேலும் ரத்தம் உறைந்த போவதைத் தடுக்க உடலுறுப்புக்களை அசைத்த வண்ணம் இருந்துள்ளார்.

அப்போதுஅங்கு வந்த மீட்புக் குழுவினர் பனியை அகற்றி விக்டரைக் காப்பாற்றினர். தனது கணவர் கற்றுத்தந்த பாடமே தன்னைக் காப்பாற்றியதாகவும் விக்டர் தெரிவித்துள்ளார்.

770 total views