46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் பறவையின் உடல் கண்டெடுப்பு..!

Report

சைபிரியாபிரதேசத்தில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பறவையின் உடல், 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் ((horned lark)) பறவையினுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சைபிரியாவின் வடகிழக்கிலுள்ள பெலாய கோராவில் அந்த பறவையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சுவீடன் ஆய்வாளர்கள் நிகோலஸ் டஸக்ஸ், லவ் டேலன் ஆகியோர் ஆய்வு செய்தபோது, இந்த விவரம் தெரியவந்தது..

இதேபோல் அங்கு கண்டெடுக்கப்பட்ட ஓநாய்கள், மம்மோத் எனப்படும் ராட்சத யானை, கம்பளி காண்டா மிருகங்களின் உடல் பாகங்களையும் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

3685 total views