ரூ.3.70 கோடிக்கு ஏலம் போன உலகப்புகழ் பெற்ற ஓவியம்..!

Report

குழந்தைகளின் அறிவு திறனை அதிகரிக்க உதவும் ரூபிக் கியூப்ஸ் விளையாட்டு பொருளால் உருவாக்கப்பட்ட மோனாலிசா ஓவியம், பாரீஸ் ஏலத்தில் 5 லட்சம் டாலர்களுக்கு விலை போனது.

கண்கவர் வண்ணங்களில் சிறிய பிளாஸ்டிக் சதுரங்களை வைத்து தனித்துவமான புன்னகை மாறாமல் தத்துரூபமாக இந்த ஓவியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்வேடர் என்ற தெருக் கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்துக்கு இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாயாக ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்ட போதும் இந்திய மதிப்பில் 3 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

1221 total views