தாஜ்மஹாலில் டொனால்ட் ட்ரம்ப் தம்பதியினர்...ஆக்ராவில் அமோக வரவேற்பு!

Report

இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா, மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் ஆகியோர் இன்று மாலை தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.

மாலை ஆக்ரா வந்தடைந்த அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆக்ரா விமான நிலையத்தில் உத்தரப்பிரதேச மாநில பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரை ஆக்ரா விமான நிலையத்தில் உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை ட்ரம்ப்மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் கண்டுகளித்தனர்.

பின்னர் தாஜ்மகால் சென்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடும்பத்தினர் தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.

தாஜ்மஹால் பிரமிப்பைத் தூண்டுகிறது. இந்திய கலாச்சாரத்தின் செழிப்பான மற்றும் பன்முக அழகுக்கு சான்றாக இது விளங்குகிறது. நன்றி, இந்தியா என்று தாஜ்மஹாலில் நுழைவதற்கு முன்பு அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

India Gears Up To US President Host Donald Trump

India Gears Up To US President Host Donald Trump

India Gears Up To US President Host Donald Trump

India Gears Up To US President Host Donald Trump


1760 total views