மலேசியப் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்...!

Report

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டுப் பேரரசர் மகதீரிடம் அளித்தார். இத்தகவலை மலேசியப் பிரதமரின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மலேசியப் பிரதமர் அலுவலகம் கூறும்போது, “மலேசியப் பிரதமர் தனது ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளது

பிரதமர் மகாதீர் முகமது தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாக உள்ளன.

இந்நிலையில் பிரதமர் பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சியில் சில பிரிவினர் வலியுறுத்திய நிலையில், ஆளும் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தின் முடிவில், மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா செய்யும் நாள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர் மகாதீர் முகமது டஹ்னது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மகதீர் முகமதுவின் ராஜினாமாவை தொடர்ந்து அவருடைய கட்சி அன்பர் இம்ராகிம் தலைமையிலான புதிய அரசை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மகதீர் முகமது மற்றும் அன்வர் இம்ராஹிம் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக நிலவிய மோதல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

1418 total views