சீனாவில் கோவிட் 19 பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரிப்பு

Report

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 2, 592 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

இதுகுறித்து சீன தேசிய சுகாதார அமைச்சகம் தரப்பில், “ சீனாவில் நேற்று கோவிட் 19 (கொரோனா ) வைரஸ் பாதிப்புக்கு 150 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கரோனா பாதிப்புக்கு 2, 592 பேர் பலியாகி உள்ளனர்.77,150 பேர் கோவிட் 19 (கொரோனா) வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்கொரியாவில் கோவிட் 19 (கொரோனா ) வைரஸ் பாதிப்புக்கு மேலும் 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தென்கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 763 -ஆக அதிகரித்துள்ளது.

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவை அடுத்து கரோனா வைரஸ் பாதிப்புக்கு அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா அறியப்படுகிறது.

இதன்காரணமாக தென்கொரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

1218 total views