இத்தாலியில் கொரோனா வைரஸ் குணமடைய போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை!

Report

இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

சீனாவில் துவங்கிய கொரோனா பாதிப்பு தற்போது ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியது.

இத்தாலியில் 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 320 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும், சுவாச முகமூடிகளை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

உலகளவில்,குறைந்தது 80,000 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

588 total views