தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல ஆஸி கிரிக்கெட் வீரர்!

Report

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், மெல்போர்னில் வாழ்ந்து வரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினி ராமன் என்ற பெண்ணை திரும?ன் செய்யவுள்ளார்.

பிப்ரவரி 26 அன்று தன் நீண்ட நாள் காதலி வினி ராமனுக்கு மோதிரம் அணிவித்து அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து பலரும் மேக்ஸ்வெல்லுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த சகலதுறை வீரராக கருதப்படுபவர். ஐபிஎல் தொடரில் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது.

கடந்த 2020 ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல் 10 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி இருந்த நிலையில் அது பெரிய அளவில் பேசப்பட்டது.

அத்துடன் மன அழுத்தம் பற்றி வெளிப்படையாக பேசிய முதல் கிரிக்கெட் வீரர் என பலராலும் கிளென் மேக்ஸ்வெல் பாராட்டப்பட்டார்.

7348 total views