கொரோனா வதந்தி பரப்­பிய 24 பேர் கைது!

Report

இரானில் கொரோனா வைரஸ் தொடர்பில் இணை­யத்தில் வதந்தி பரப்­பிய குற்­றச்­சாட்டில் 24 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இத்தகவலை ஈரா­னிய ஐ.எஸ்.என்.ஏ. செய்­திச்­சேவை நேற்று வெளி­யிட்­டது.

ஈரானில் கொவிட்-–19 வைரஸ் பரவல் தொடர்­பாக வதந்தி பரப்­பிய 24 பேர் கைது செய்­யப்­பட்­டதுடன் , மேலும் 118 பேர் விசா­ரிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டதாகவும் அச்­செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஈரானில் கொவிட்-19 வைரஸினால் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 139 பேர் இத்தொற்றுக்குள்ளாமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா அச்சத்தினால் ஈரானுடனான எல்லைகளை துருக்கி, பாகிஸ்தான் முதலான நாடுகள் மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகளாவிய ரீதியில் கொவிட் -19 வைரஸினால் உயிரிந்தோர் எண்ணிக்கை 2,804 ஆக உள்ளதுடன் 82,166 பேருக்கு இவ்வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1580 total views