கொரோனா எதிரொலி -மக்கா புனிதப் பயணத்திற்கான விசாக்களை நிறுத்திய சவூதி!

Report

மக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசாக்களை சவூதி அரேபிய அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான வீசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் உம்ராவுக்காக சவூதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதியும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவூதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு வீசாக்கள் வழங்கபடமாட்டாது என சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

1099 total views