சமூக விலகல் அவசியம் - லண்டன் மருத்துவ பேராசிரியா் எச்சரிக்கை

Report

ஒரு கொரோனா வைரஸ் நோயாளி 59,000 பேருக்கு தொற்றுநோயை பரப்பக்கூடும். ஏனெனில் இது காய்ச்சலை விட மூன்று மடங்கு அதிவேகமாகப் பரவக் கூடிய வைரஸ் தொற்றாகும்.

இவ்வாறு எச்சரித்துள்ளார் என லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியைச் சேர்ந்த அதிதீவிர சிகிச்சை மருத்துவ பேராசிரியா் டாக்டர் ஹக் மாண்ட்கோமெரி.

சமூக விலகல் குறித்த ஆலோசனைகளுக்கு மக்களுக்கு அவா் அழைப்பு விடுத்தார்.

ஒருவரிடமிருந்து எவ்வாறு ஆயிரக்கணக்கானவர்களுக்கு இந்த வைரஸ் பரவலாம்? என்பதை அவா் விளக்குகிறார்.

சாதாரண காய்ச்சலால் நான் பாதிக்கப்பட்டால் அக்காய்ச்சல்

சராசரியாக என்னிடம் இருந்து 1.3 அல்லது 1.4 பேருக்கு தொற்றும்.

அந்த 1.3 அல்லது 1.4 பேர் அந்தக் காய்ச்சல் அடுத்தவா்களுக்கு பரவக் காரணியாவார்கள்.

இது 10 முறை நடந்த நேரத்தில் சுமார் 14 பேரின் காய்ச்சலுக்குரிய பொறுப்பை நானே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் பொதுவான காய்ச்சலை விட கொரோனா வைரஸ் எவ்வாறு மிகவும் தொற்றுநோயாக இருக்கிறது என டாக்டர் மாண்ட்கோமெரி விளக்கினார். இந்தச் சூழ்நிலையில் தொற்றுக்குள்ளான ஒரு நபர் 59,000 பேரை பாதிக்கக்கூடும்.

சமீபத்திய வாரங்களில் பிரிட்டனில் இந்த வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. 8,000 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 422 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னா் 71, 87, என்ற அளவிலேயே இறப்புக்கள் பதிவாகின.

ஒரு வார இடைவெளியில் இங்கிலாந்தின் இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறு மடங்கு உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் மிக வேகமான தொற்றுநோயாகும். எனவே, ஒவ்வொரு நபரும் அதை குறைந்தது மூன்று பேருக்குப் பரப்புகின்றனா்.

பின்னா் அந்த 9 போ் 27 பேருக்குப் பரப்புகின்றனா்.

இவ்வாறு 10 அடுக்குகளில் நடந்தால் 59,000 பேருக்கு தொற்று ஏற்பட நான் பொறுப்பாவேன்.

எனவே சமூக விலகல் குறித்த ஆலோசனையை புறக்கணிக்க வேண்டாம் என்று அவர் மக்களை வலியுறுத்தினார்.

உரிய சமூக விலக்கல் அறிவுரையைப் பேணினால் பாதிப்புக்களைத் தவிர்க்கலாம். இது தொற்றுக்குள்ளாவோரின் தொகையைக் குறைக்கும். ஒரு சிறிய சதவீதத்தினர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வரக்கூடும். மேலும் ஏராளமான மக்களின் உயிரையும் நாம் காப்பாற்ற முடியும் எனவும் அவா் கூறினார்.

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நாங்கள் வழங்கக்கூடிய சிறந்த நிவாரணம் போதுமான படுக்கைகள் மற்றும் போதுமான ஊழியர்கள், மருத்துவ ஊழியா்களுக்கான பாதுகாப்புக் கவசங்கள் என்பவற்றை போதிய அளவு கைவசம் வைத்திருப்பதே என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள் எனவும் மருத்துவ பேராசிரியா் டாக்டர் ஹக் மாண்ட்கோமெரி கூறினார்.

உங்களுக்கு காய்ச்சல் வந்தால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு நீங்கள் பொறுப்பற்றவராக இருந்தால் அது உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதது மட்டும் அல்ல. மற்ற எவரைப் பற்றியும் உங்களுக்குக் கவலை இல்லை என்பதே அதன் பொருள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நோய்த்தொற்று ஏற்பட்டபின் பெரும்பாலான மக்கள் லேசான அறிகுறிகளை உணருவார்கள், மேலும் சிலர் நன்றாக இருப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார். ஆனால் அவர்கள் சுயமாக தனிமைப்படுத்தாவிட்டால் அவர்கள் இன்னும் வைரஸை பரப்பக்கூடும்.

ஒரு சிலர் தங்கள் நோயின் பத்து நாளில் அதிக பாதிப்புக்களை அனுபவிப்பார்கள். எனவே, அவர்கள் ஒரு மருத்துவமனைக்கு வர வேண்டும், அவர்கள் ஒரு மருத்துவமனையில் இருக்கும்போது அங்குள்ள வளங்களையும் நேரத்தையும் எடுத்துக்கொள்வார்கள்.

அந்த நபர்களில் சிலர் மோசமாகப் பாதிக்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருவார்கள். அங்குதான் உங்கள் உயிர் காப்பாற்றப்படுகிறதா? இல்லையா? என்பது முடிவாகும்.

அதிகளவானோர் வைத்தியசாலைக்கு வந்தால் பெரும் பிரச்சினை ஏற்படும்.

எங்களிடம் ஒரு குறிப்பட்டளவு வளங்கள் தான் உள்ளன. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான செயற்கைச் சுவாசக் கருவிகள்தான் உண்டு. குறிப்பிட்டளவு மருத்துவா்கள் மற்றும் செவிலியர்கள்தான் எங்களிடம் உள்ளனா்.

ஏனென்றால் எல்லா நேரத்திலும் ஒரு பெரிய அதிகப்படியான திறனுடன் நம்மை இயக்க முடியாது .

அதிகளானோர் பாதிக்கப்பட்டால் மக்களை சரியாகக் கவனிக்க எங்களால் முடியாது. சிறப்பான சேவையை வழங்க முடியாது எனவும் லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியைச் சேர்ந்த அதிதீவிர சிகிச்சை மருத்துவ பேராசிரியா் டாக்டர் ஹக் மாண்ட்கோமெரி தெரிவித்தார்.

3551 total views