இத்தாலியில் தொடரும் சோகம்! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்தது

Report

இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 889 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரசிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்தில் 1434 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் புதிதாக தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

லொம்பார்டியில் கடந்த 24 மணிநேரத்தில் 542 ஆக காணப்பட்டதாகவும் அந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6000 எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

11089 total views