கட்டுக்கடங்காத கொரோனா...அடுத்த சில நாட்களில் பாதிக்கப்பட்டோர் 10 லட்சமாக அதிகரிக்கும்... உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Report

மனித சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸால், அடுத்த சில நாட்களில் பாதிக்கபட்டோர் 10 லட்சமாக அதிகரிக்கும் என்றும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 50 ஆயிரமாக அதிகரிக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகளவில் மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்19 வைரஸ் னாவில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, ஐரோப்பாவுக்குள்பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் உலகளவில் இறந்தவர்கள் எண்ணிக்கையில் ஐரோப்பியாவில்தான் அதிகம்.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஜெர்மனியிலும் பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சத்தை நெருங்குவதுடன் பிரான்ஸில் பாதிகபட்டோர் எண்ணிக்கை 50ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி இத்தாலியில் 13,155 பேர் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளதுடன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 574 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளதுடன் 5 ஆயிரத்து 110பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரியேஸஸ் ஜெனிவாவில் கூறுகையில்,

கொரோனா வைரஸ் உலகில் பரவத்தொடங்கி 4-வது மாதத்தை எட்டியிருக்கிறோம். உலக அளவில் கோவிட்-19 காட்டுத்தீயாக பரவிவருவது பெரும் கவலையாகவும், அச்சமாகவும் உள்ளது. குறிப்பாக கடந்த 5 வாரங்களில் கோவிட்19 வைரஸ் பரவும் வேகம் மிக மோசமாக அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்பும் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

நேற்றைய நிலவரப்படி 47 ஆயிரத்து 241 பேர் உயிரிழந்துள்ளனர். 9லட்சத்து 35 ஆயிரத்து 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 200 நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது.

சீனாவில் 81,554 பேர் கரோனாவால் பாதி்க்கப்பட்டு அதில் 76 ஆயிரத்து238 பேர் மீண்டுள்ள நிலையில் சீனாவுக்கு வெளியே 7 லட்சத்து 44 ஆயிரத்து 781 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 37 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவற்றில் மோசமாக அமெரி்க்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதோடு ஆப்பிரிக்கா, மத்திய ஆப்பிரிக்கா, தென் அமெரி்க்கா நாடுகளில் சிலர் மட்டும கராோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பல வளர்ந்து வரும் நாடுகள் மக்களுக்கு சமூகநலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியமல் இந்த கொரோனா வைரஸால் திணறுகிறார்கள். வரும் நாட்களில் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆயிரத்தையும், பாதிக்கப்பட்டோர் 10 லட்சமாகவும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

3635 total views