76 நாட்களுக்குப் பின்னர் சீனாவில் ஆரம்பமான சேவைகள்

Report

சீனாவின் வுகானில் 76 நாட்களுக்குப் பின் முதன்முறையாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

பல்லாயிரம் மக்கள் உயிரிழக்கவும், பல லட்சம் மக்கள் பாதிக்கப்படவும் காரணமாக இருந்த கொரோனா வைரஸ் வுஹான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது.

நோய்த் தொற்று பரவத் தொடங்கியதும் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நகரம் வெளித் தொடர்பினின்றும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனாத் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு 76 நாட்களாக நீடித்து வந்த ஊரடங்கு சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் வெளியே செல்வதற்கும் அனுமதிக்கபப்ட்டதால் 76 நாட்களுக்குப் பின் வந்த முதல் விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

3564 total views