கொரோனாவால் விடுவிக்கப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள்

Report

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மியான்மரில் கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஏகப்பட்ட ரோஹிங்கியர்களை கைது செய்து மியான்மர் சிறை முழுதும் நிரம்பியுள்ளதையடுத்து கொரோனா அச்சம் அவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையை தூண்டியுள்ளது.

2017-ல் மியான்மரில் தொடங்கிய இனப்படுகொலை காரணமாக சுமார் 750,000 முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர்

ஆனால் ராக்கைனில் தங்கியுள்ள எஞ்சிய ரோஹிங்கியர்கள் சுகாதாரம், கல்வி என்ற எந்த ஒரு வசதியும் இல்லாமல் சுதந்திரமாக நடமாட முடியாமல் அடைபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல பல ஆண்டுகள் ஆகும் என்கிறது ஆம்னெஸ்டி அமைப்பு

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறையில் இருக்கும் பல ரோஹிங்கியர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கையும் கடுமையாகக் குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விடுவிக்கப்பட்ட ரோஹிங்கிய கைதிகள் சிறைகளிலிருந்து பேருந்துகள் மூலம் யாங்கூனுக்கு அனுப்பப்படுவதாக ஏ.எஃப்.பி. செய்தி ஏஜென்சி தெரிவிக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக மோசமான நிலையில் இருக்கும் மியான்மர் சிறைகளிலிருந்து ரோஹிங்கியர்கள் விடுவிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறையில் இருப்பவர்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் அதிகம் என உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளதையடுத்து மியான்மர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

3041 total views