உலக நாடுகளுக்கு முன் உதாரணமாகும் தென்கொரியா

Report

தென்கொரியாவில் புதிதாக 37 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா தொற்று தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தொற்று தற்போது குறைந்து வருகிறது.

நேற்றையதினம் இதுவரை இல்லாத அளவு குறைந்தபட்ச எண்ணிக்கையாக 37 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தென்கொரியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தென்கொரிய அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தற்போது அங்கு கரோனா கட்டுக்குள் வந்துள்ளது.

தனி பரிசோதனை மையங்களை உடனடியாக அமைத்து, விரைவாக தொற்றுப் பரிசோதனைகளை அந்நாடு நடத்தியதை தொடர்ந்து இதற்கான பலனை தென்கொரியா அடைந்துள்ளது.

இதன் மூலம் உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக மாறியுள்ளது தென்கொரியா.

இதேவேளை உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு சுமார் 15,11,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 88,338 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஸ்பெயினில் 14,555 பேரும், இத்தாலியில் 17, 669 பேரும் அமெரிக்காவில் 14,965 பேர் பலியாகியுள்ளனர்.

5289 total views