நாளுக்கு நாள் பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை

Report

பாகிஸ்தானில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

தற்போதைய நிலவரப் படி பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,322 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார மையம் தெரிவிக்கையில்,

பாகிஸ்தானில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை பாகிஸ்தானில் 4,322 ஆக அதிகரித்துள்ளது. 63 பேர் பலியாகினர். 500க்கும் அதிகமானவர்கள் குணமடைந்து உள்ள நிலையில் 33 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கொரோனாவினால் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

அந்தவகையில் பஞ்சாப் மாகாணத்தில் 2,171 பேரும், சிந்து மாகாணத்தில் 1,036 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கொரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் நிலைமை இன்னும் மோசமடைய கூடும் என்றும் மருத்துவமனைகளில் சமாளிக்க முடியாமல் போகலாம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு சுமார் 15,11,104 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 88,338 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

2412 total views