பாகிஸ்தான் விமான விபத்தில் பிரபல மொடல் அழகி பலி

Report

பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் பிரபல மொடல் அழகி சாரா அபிட் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி நேற்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.

அந்த விமானத்தில் 91 பயணிகளும் 7 விமான ஊழியர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர்.

குறித்த விமானம் மக்கள் அதிகம் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக கராச்சி மேயர் வாசிம் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த விமானத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி சாரா அபிட்டும் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவரும் இறந்திருக்கக் கூடும் அஞ்சப்படுகிறது.

2426 total views