ஜூன் 30ந்தேதி வரை பெருவில் பொதுமுடக்கம் நீட்டிப்பு

Report

பெரு நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அடுத்த மாதம் 30ந்தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அந்நாட்டின் அதிபர் மார்டின் வைஸ்கரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெருவில் முதன்முறையாக மார்ச் மாத மத்தியில் பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது 5வது முறையாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் நீண்ட காலம் பொதுமுடக்கத்துக்கு ஆளான நாடுகளில் ஒன்றாக பெரு விளங்குகிறது.

சுமார் மூன்றரை மாத காலம் பெருவில் பொதுமுடக்கம் நீட்டிக்கிறது. பெருவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 11ஆயிரத்து 698பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3ஆயிரத்து 244பேர் உயிரிழந்துள்ளனர்.

1937 total views