20 அழகிகளுடன் உல்லாசமாக வாழும் தந்தை! பரிதாபமாக தனிமையில் வாழும் மன்னர் மகன்

Report

கொரோனா கட்டுப்பாட்டில் கூட தாய்லாந்து மன்னர் 20 அழகிகளுடன் உல்லாசமாக சொகுசு ஹொட்டலில் செலவிடும் நேரத்தில், அவரது மகன் பரிதாபமாக தனிமையில் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

10ஆவது Rama என்று அழைக்கப்படும் தாய்லாந்து மன்னரான MahaVajiralongkorn (67), தனிமைப்படுத்தல் என்ற பெயரில் சொகுசு ஹொட்டல் ஒன்றில், 20 பாலியல் வீராங்கனைகள் என்று அழைக்கப்படும் அழகிகளுடன் உல்லாசம் அனுபவித்துவருகிறார்.

இந்நிலையில், தனிமையில் பரிதாபமாக வாழும் அவரது மகன் குறித்த தகவல்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் தந்தை உல்லாசமாக வாழும் சொகுசு ஹொட்டலுக்கு சற்று தள்ளி அமைந்திருக்கும் வீடு ஒன்றில் தனிமையில் வாழ்கிறாராம் மன்னரின் மகனான இளவரசர் Dipangkorn Rasmijoti (15).

மன்னரின் மூன்றாவது மனைவியான இளவரசி Srirasmi(48)க்கு பிறந்தவர் இளவரசர் Dipangkorn.கடந்த 2014இல் மன்னர் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் , அரண்மனையை விட்டுதுரத்தியடிக்கப்பட்டாராம் Srirasmi.

அதிலிருந்து தாயை சந்தித்ததில்லையாம் இளவரசர் Dipangkorn. இதற்கிடையில் இளவரசரைக் குறித்த மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.அது, இளவரசர் Dipangkorn ஆட்டிசம் பிரச்சினை உடையவர் என்பதுதான்.

தாய்லாந்தில் புத்த மரபுப்படி ஆட்டிசம் கொண்ட இளவரசரை சாத்தான் என்று அழைப்பதுண்டாம், அதனால்தான் மன்னர் அவரை மக்கள் கண்ணில் படாமல் ஜேர்மனியில் மறைத்து வைத்துள்ளாராம்.

மன்னரின் ஒரே மகனானாலும், அரியணைக்கு ஒரே வாரிசானாலும், மன்னரின் மரணத்துக்குப்பின் Dipangkorn 11ஆம் Rama என்று அழைக்கப்படுவார், அவ்வளவுதான்.

ஆனால், அரியணையில் அமர்ந்து அரசாளப்போவது மன்னரின் சகோதரியான Sirindhornஅல்லது மகளான Bajrakitiyabhaதானாம்.

20129 total views