விசேட விமானம் மூலம் நாடு திரும்பிய 260 பேர்

Report

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கித்தவித்த 260 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குறித்த 260 பேரும் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து அழைத்துவரைப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இதனையடுத்து நாடு திரும்பிய அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2295 total views