பாகிஸ்தான் விமான விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய விமான பணிப்பெண்!

Report

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் சுமார் 97 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந் நிலையில், அதிர்ஷ்டவசமாக விமானப் பணிப்பெண் ஒருவர் உயிர் தப்பியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேற்று லாகூரில் இருந்து கராச்சி விமான நிலையத்தில் தரையிரங்க முற்பட்ட போது, எதிர்பாரதவிதமாக குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இதில் 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் உயிர் தப்பியுள்ளதாக பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விமானத்தில் Madiha Iram என்பவர் பணிப்பெண்ணாக செல்ல வேண்டியது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

4423 total views