விமானியின் அலட்சியமே பாகிஸ்தான் விமான விபத்திற்கு காரணமாம்

Report

பாகிஸ்தான் விமான விபத்திற்கு விமானியின் அலட்சியமே காரணமென தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு நிலைய எச்சரிக்கையை விமானி மீறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

விமானம் பயணத்தை ஆரம்பித்த தினத்தன்று மதியம் 1.05 மணிக்கு லாகூரில் புறப்பட்ட அந்த விமானம் 2.30 மணிக்கு கராச்சியில் தரையிறங்கவேண்டும்.

2.30 மணிக்கு கராச்சியில் இருந்து 15 கடல் மைல் (Nautical mile) தொலைவில் விமானம் பறந்தபோது, தரையில் இருந்து 7000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 10000 அடி உயரத்தில் பறந்துள்ளது.

இதனைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், உயரத்தை குறைக்கும்படி விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும் , விமானம் பறக்கும் உயரத்தை குறைப்பதற்கு பதிலாக, அது சரியாக இருப்பதாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

கராச்சி விமான நிலையத்தை அடைய 10 கடல் மைல் தூரம் இருந்தபோது, விமானம் பறக்கும் உயரம் 3,000 அடிக்கு பதிலாக 7,000 அடியாக இருந்துள்ளது.

எனவே, இரண்டாவது முறை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த போதும், அப்போதும் தனக்கு திருப்தி அளிப்பதாக கூறிய விமானி, விமானத்தை தரையிறக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 97 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் விபத்து தொடர்பாக பாகிஸ்தானிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3078 total views