கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஜப்பான்- மக்கள் மகிழ்ச்சி

Report

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே டோக்கியோவிலும், இன்னும் நான்கு பகுதிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகளின் கீழ் இருந்த அவசரகால நிலையை நீக்கியுள்ளார்.

இதனால், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை படிப்படியாக மீண்டும் திறந்து, மக்களை "புதிய இயல்பு நிலைக்கு" மாற்றியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜப்பானில் விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால், அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அத்துடன் சமீபத்தில், புதிய நோய்த்தொற்று வழக்குகள் முழு நாட்டிற்கும் 50 க்கும் குறைந்துவிட்டன.

ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 10,000 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோய் தொற்றாளர்கள் எண்ணிக்கை இப்போது 2,000 க்கும் குறைந்துவிட்டன" என்று அபே திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கிழக்காசிய நாடான ஜப்பானில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இவ்வாறான நிலையில் சமீபத்தில், டோக்கியோ உள்ளிட்ட நான்கு நகரங்களை தவிர, மற்ற நகரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்நிலையில், நேற்றிலிருந்து, டோக்கியோ உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாகவும், அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், அரசு அறிவித்தது. இது, ஜப்பான் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1280 total views