அமெரிக்கப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள்!

Report

பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக இருந்த ரெஹ்மான் மாலிக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிந்தியா டி. ரிச்சி என்ற அமெரிக்கப் பெண் தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு சுற்றுலா பயணியாக அமெரிக்கப் பெண்மணி சிந்தியா டி.ரிச்சி பாகிஸ்தான் வந்துள்ளார்.

அங்கு அப்போதைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த யூசப் ராசா கிலானி மற்றும் உள்துறை மந்திரி ரெஹ்மான் மாலிக் ஆகியோரின் தயவால் பாகிஸ்தான் மக்கள் கட்சியியுடன் இணைந்து, அதன் தகவல் தொடர்பு ஆலோசகராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்துறை அமைச்சராக இருந்த ரெஹ்மான் மாலிக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிந்தியா டி. ரிச்சி கூறியது அனைவரிடமும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து இம்ரான் கானின் கட்சிக்கு ஆதரவளித்து வந்த ரிச்சி, தற்போது அதனை விடுத்து இஸ்லாமாபாத்தில் ஒரு எழுத்தாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ரிச்சி தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சி முன்னாள் தலைவர்கள் மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் பாகிஸ்தானில் புயலை கிளப்பியுள்ளன.

நேற்று மாலை பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிய சிந்தியா டி.ரிச்சி, முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மக்தூம் ஷாஹாபுதீன் மற்றும் முன்னாள் பிரதமர் யூசப் ராசா ஆகியோரால் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

அத்துடன் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் தன்னிடம் இன்னும் இருப்பதாகவும், அடுத்த வார தொடக்கத்தில் அதை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

பொருத்தமான, நடுநிலை மற்றும் புலனாய்வு பத்திரிகையாளருடன் மேலும் விரிவாகச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைவேன் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை பாகிஸ்தானில் அப்போதைய ஆளும் கட்சியியான பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இருந்த பல தலைவர்கள் தொடர்பான ரகசியங்களை இவர் தற்போது வெளிக் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே முன்னாள் அரசியல் தலைவர்கள் மீதான ரிச்சி இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8227 total views