சுலைமானி படுகொலை: டிரம்ப்புக்கு ஈரான் பிடியாணை!!

Report

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேரை கைது செய்ய, ஈரான் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஈரான் நாட்டின் குர்து படை கமாண்டர் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி மாதம் 3ம் திகதி டெஹ்ரான் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.

அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் அவர் பலியானார். இது ஈரான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதயைடுத்து, சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தகுந்த விலை கொடுக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்தது.

இதற்கு பழிதீர்க்கும் விதமாக ஜனவரி 8ஆம் திகதி ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனாலும், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. கொரோனா பரவலால் யுத்த அபாயம் சற்று தணிந்திருந்தது.

இந்நிலையில், சுலைமானி படுகொலை வழக்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்காவை சேர்ந்த 30 உயரதிகாரிகளுக்கு அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்து ஈரான் உத்தரவிட்டுள்ளது. மேலும், டிரம்பை கைது செய்ய இன்டர்போல் உதவ வேண்டும் எனவும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1282 total views