ஈரான் வைத்தியசாலையில் வெடிப்பு ! 19 பேர் பலி

Report

ஈரானின் வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வெடிப்புச் சம்பவம் ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் தைரிஷ் சதுர்க்கத்திற்கு அருகிலுள்ள வைத்தியசாலையிலேயே இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் உள்ள ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் 15 பெண்களும் 4 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த வெடிப்புச் சம்பவத்தையடுத்து வைத்தியசாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், வைத்தியசாலையில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை வைத்தியசாலையில், ஒக்சிஜன் சிலிண்டர்கள் அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் அவை தொடரந்து வெடித்து சிதறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1296 total views