ரஷ்யாவுடன் சண்டைக்கு போகும் சீனா.. தொடங்கியது புதிய எல்லை பிரச்சனை

Report

ரஷ்யாவில் இருக்கும் நிலப்பரப்பு ஒன்றை சீனா தற்போது உரிமை கொண்டாட தொடங்கி உள்ளது. இதனால் தற்போது ரஷ்யாவிற்கு சீனாவிற்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் உடன் சீனா மோதலில் இருக்கிறது. அந்தவகையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுடன் கடல் ரீதியாகவும், ராணுவ எல்லை ரீதியாகவும் மோதி வருகிறது.

சீனாவிற்கு இருக்கும் ஒரே நண்பன் ரஷ்யாதான் என்று நிலைமை இருக்கிறது. எனினும் தற்போது அதே ரஷ்யாவுடன் சீனா மோதலுக்கு சென்று உள்ளது.

ரஷ்யாவில் இருக்கும் நகரமான விளாடிவோஸ்டோக் நகரத்தை சீனா சொந்தம் கொண்டாட தொடங்கி உள்ளது. இந்த இடம் முதலில் சீனாவின் கட்டுப்பாட்டில் 1600களில் இருந்தது. அதன்பின் நடந்த இரண்டாம் ஓபியம் போரில் சீனா தோல்வி அடைந்தது. இதில் இந்த விளாடிவோஸ்டோக் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. அதன்பின் 1860ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம் விளாடிவோஸ்டோக் பகுதியை அதிகாரபூர்வமாக ரஷ்யா தன்வசப்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது இந்த ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளதோடு . விளாடிவோஸ்டோக் தங்களுக்குத்தான் சொந்தமென்று சீனா மோத தொடங்கி உள்ளது. சீனாவின் ஓநாய் வீரர்கள் இப்போதே ரஷ்யாவிற்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதேவேளை 160 வருடமாக ரஷ்யாவிடம் இந்த விளாடிவோஸ்டோக் சட்ட ரீதியாக இருக்கிறது. ரஷ்யாவில் விளாடிவோஸ்டோக் இணைந்ததற்கான ஆண்டு விழாவை அந்த நாடு சில நாட்கள் முன் கொண்டாடியது. இதனால்தான் தற்போது விளாடிவோஸ்டோக் மீது சீனா கண் வைக்க தொடங்கி உள்ளது. இந்த நிலம் எங்களுக்கு சொந்தம். ரஷ்யா இதையே அபகரித்து விட்டது. இதை மீண்டும் ரஷ்யா எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சீனா பிரச்சாரம் செய்து வருகிறது.

சீனாவின் இந்த செயலால் ரஷ்யா அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனாவை அனைத்து இக்கட்டான சூழ்நிலையிலும் ரஷ்யா உதவி செய்துள்ளது. கொரோனா சமயத்தில் கூட ரஷ்யா சீனா மீது புகார் வைக்கவில்லை . அதேபோல் அமெரிக்கா எப்போது மோதினாலும் அப்போதெல்லாம் ரஷ்யாதான் சீனாவிற்கு ஆதரவு அளித்துள்ளது. ஆனால் தற்போது அதே ரஷ்யாவை சீனா முதுகில் குத்தி உள்ளது.

ஏற்கனவே சீனா தனது எல்லையில் 14 நாடுகள் உடன் மோதலை கடைபிடித்து வருகிறது. அதிலும் எல்லையை பகிராத நாடுகள் உடனும் கூட சீனா மோதி வருகிறது. அத்துடன் 21 நாடுகள் உடன் சீனா இப்படி மோதி வருகிறது. இந்த நிலையில் தற்போது ரஷ்யாவையும் சீனா எதிர்த்து வருகிறது.

இதேவேளை நிலமை இவ்வாறு செல்லுமானால் உலக அளவில் சீனா விரைவில் தனிமைப்படுத்தப்படும் என அவதானிகள் கூறுகிறார்கள்.

30287 total views