பெய்ரூட் வெடிவிபத்து - மணப்பெண்ணை விடியோ எடுத்த போது பதிவான காட்சி!

Report

லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் நேரிட்ட மிகப் பயங்கர வெடிவிபத்து நாட்டையே உலுக்கிப் போட்டுள்ளது. இந்த விபத்தில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியாகியதுடன் 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மிகச் சரியாக இந்த வெடி விபத்து நிகழ்ந்த போது, அப்பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதன்போது மணப்பெண்ணை உள்ளூர் புகைப்படக்காரர் மிக அழகாகப் படம்பிடித்துக் கொண்டிருந்தார். சரியாக அந்த விடியோவை பதிவு செய்யும்போதுதான் பெய்ரூட்டில் வெடிவிபத்து நேரிட்டது. அந்த அதிர்வும் விடியோவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அந்த விடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

எனினும் நல்லவேளையாக மணப்பெண்ணும், மணமகனும் காயங்கள் இன்றி உயிர் தப்பியதாகவும் கூறப்படுகின்றது.

13926 total views