லெபனானில் கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம்..! பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு

Report

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து துறைமுக மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளிடம் விசாரணை தொடர்கிறது.

அதிக அபாயம் கொண்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள்களை சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்ததாக அவர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெடிவிபத்துக்கு எதிராக வெடித்தெழுந்த மக்கள், அரசின் அலட்சியப்போக்கைக் கண்டித்து பெய்ரூட் தியாகிகள் சதுக்கத்தில் ஒன்றாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வெளிநாட்டு அமைச்சகம் முன்பு கூடிய மக்கள், அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி அதிபர் மைக்கேல் ஆவ்னின் உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தினர்.

அப்போது பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றது போர்க்களம்போல் காட்சியளித்தது.

1002 total views