உலகின் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி சோதனையை நிகழ்த்திய ரஷ்யா - போட்டுக்கொண்டது யார் தெரியுமா?

Report

கொரோனா தடுப்பூசியை ரஷ்யா சுகாதாரத்துறை அனுமதி அளித்து ரஷ்யாவில் அது மனிதர்களுக்கு போடும் நிலைக்கு வந்துள்ளது.

கொரோனா காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில் அந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல உலக நாடுகள் தங்கள் ஆராய்ச்சியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

இந்த ஆராச்சிகளில் பல நாடுகள் வெற்றிகரமான முன்னேற்றங்களை அடைந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசிக்கு ரஷ்யா சுகாதாரத்துறை அனுமதி அளித்ததை அடுத்து மனிதர்களுக்கு போட முடிவு ரஷ்யா செய்துள்ளது .

இதையடுத்து முதல் ஊசியை புதின் மகள்களில் ஒருவரே முதன் முதலாக போட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள புதின், 'இந்த தடுப்பூசி எல்லாவிதமான சோதனைகளையும் தாண்டிவிட்டது. ஆனால் நாங்கள் யாரையும் வற்புறுத்தி இந்த ஊசியை போட சொல்லப்போவதில்லை. தன்னார்வமாக வருபவர்களுக்கே இந்த ஊசி போடப்படுகிறது' எனக் கூறியுள்ளார்.

6498 total views