இறக்குமதி செய்யப்பட்ட சிக்கனில் கொரோனா: சீனா வெளியிட்ட பகீர் தகவல்!

Report

பிரேசிலில் இருந்து தென் சீன நகரமான ஷென்சென் நகருக்கு இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கோழி சிறகுகளின் மாதிரிகளில் செய்யப்பட்ட கொரோனா வைரஸ் (Corona Virus) சோதனைகளின் முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் பீஜிங்கில் ஏற்பட்ட தொற்றின் புதிய அலை க்சின்ஃபாடி கடல் உணவு சந்தையுடன் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிய வந்தது.

அப்போதிருந்து இறைச்சி மற்றும் கடல் உணவு இறக்குமதியில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனைகளின் ஒரு பகுதியாக கோழி சிறகுகளிலிருந்து எடுக்கப்பட்ட மேற்பரப்பு மாதிரிகள் சோதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட உணவுப் பொருட்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய அனைவரையும் ஷென்சனின் சுகாதார அதிகாரிகள் பரிசோதித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட தொகுதிக்கு அருகில் சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்களையும் சோதித்தனர். இந்நிலையில் அனைத்து முடிவுகளும் எதிர்மறையாகவே வந்துள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி மற்றும் கடல் உணவுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், தொற்று அபாயங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஷென்ஜென் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தலைமையகம் தெரிவித்துள்ளது.

6176 total views