உலகின் பிரபலமான மோதிரம்; யாருடையது தெரியுமா?

Report
113Shares

உலகின் மிக பிரபலமான நிச்சயதார்த்த மோதிரமாக பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டனின் நிச்சயதார்த்த மோதிரம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

12 கரட் நீல மாணிக்கக்கல் மீது 14 வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த மோதிரம் மறைந்த இளவரசி டயனா அணிந்திருந்ததாகும்.

சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த மோதிரத்தை 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நிச்சயதார்த்தத்தின்போது இளவரசர் வில்லியம், கேத்தரினுக்கு அணிவித்தார்.

மேலும், இந்த பட்டியலின் 2 ஆவது இடத்தில் இளவரசர் ஹரியின் மனைவி மேகனின் நிச்சயதார்த்த மோதிரம் இடம்பெற்றுள்ளது.

உலகில் முதல் 10 இடங்களை பிடித்த மோதிரங்களின் வரிசை இதோ,

1. பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டனின் ஓவல் நீல சபையர் நிச்சயதார்த்த மோதிரம்

2. மேகன் மார்க்கலின் இரண்டு சிறிய வைரங்களால் சூழப்பட்ட மெத்தை வெட்டு மைய வைரத்துடன் முத்தொகுப்பு வளையம் மோதிரம்

3. அமெரிக்க பாடகர் மைலி சைரஸின் சொலிட்டர் அமைவு வளையம் மோதிரம்

4. அமெரிக்க மொடல் அழகி ஹெய்லி பீபரின் ஓவல் நிச்சயதார்த்த மோதிரம்

5. அமெரிக்க பாடகி பியோனஸின் 18 கரட் மரகதம் வெட்டு வைர மோதிரம்

6. அமெரிக்க நடிகை எலிசபெத் டெய்லரின் க்ரூப் வைர மோதிரம்

7. அமெரிக்க ரப் பாடகர் கார்டி பி யின் பேரிக்காய் இரண்டு வைர ஹலோஸுடன்

8. அமெரிக்க பாடகர் டெமி லோவாடோவின் மல்டி கெரட் எமரால்டு வெட்டு வளையம் இரண்டு சிறிய வைரங்களுடன் மோதிரம்

9. ஹொலிவூட்டின் ரியாலிட்டி நிகழ்ச்சி புகழ் கிம் கர்தாஷியனின் 15 கெரட் குஷன் வெட்டப்பட்ட வைர மோதிரம்

10. நடிகை, சோஷியலைட் பாரிஸ் ஹில்டனின் கிரீன் & கோ 20 கெரட் பேரிக்காய் வடிவ வைரங்கள் சிறிய வைரங்களுடன் மோதிரம்

4473 total views